தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ் ஜனம் தொலைக்காட்சி தலைமை அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா, வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விநாயகர் சிலைக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊழியர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் நிர்வாகிகளும், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.