நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மூத்த பெண் யானை பாதுகாப்பில் தூக்கம் போட்ட காட்டுயானைகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீலகிரியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் மாவட்டம் முழுவதும் பசுமையாக காணப்படுகிறது. இந்நிலையில் கேரளாவில் இருந்து பந்தலூருக்கு புலம்பெயர்ந்த யானைகள் சேரம்பாடி தேயிலைத் தோட்டத்தில் உலா வந்தன.
அப்போது அதில் 11 காட்டு யானைகள் சாலையோரம் உள்ள புல்வெளியில் படுத்து உறங்கின. அப்போது மூத்த பெண் யானை ஒன்று சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக யானைகளை பாதுகாத்து நின்றது. இது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.