ஜன் தன் யோஜனா திட்டத்தில் 29 கோடியே 60 லட்சம் பெண்கள் வங்கி கணக்கு வைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கோவையில் சுயம் திட்டத்தின் கீழ் மகளிருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழாவில் பேசியவர்,
அமைச்சராக இருப்பதால் பல நிகழ்ச்சிக்கு செல்வதுண்டு. ஆனால் இந்த நிகழ்ச்சி மிக முக்கியமானது. காரணம் பெண்களை தொழில் முனைவோராக ஆக்கும் நிகழ்ச்சி என்பதால். படிப்பு எவ்வளவு படிச்சாலும் வாய்ப்பு என்பதே நமக்கு முதல் கருவி.
படிச்சி முடுச்சி இன்ஜினியரிங் வேலைக்கு போனாலும் வேலையை கற்று கொள்ள 6 மாதங்கள் ஆகிறது. வேலையில் திறமை இல்லாமல் இருக்கிறார்கள். திறமை மிக முக்கியம்.
பிரதமர் மோடி ஒவ்வொரு திட்டத்தை கொண்டு வரும்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தீர்களா. இந்த திட்டத்தில் சேர்த்தீர்களா என்று கேட்பார். இன்று பெண்களின் வாழ்வு முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் 29.6 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கு உள்ளது. கோவையில் மட்டும் 5 லட்சம் வங்கி கணக்கு இத்திட்டத்தில் உள்ளது எனத் தெரிவித்தார்.