பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை எழும்பூர் இராஜரத்தினம் மைதானம் அருகே 500க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுப் பள்ளியில் பணியாற்றி வரும் பகுதிநேர ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்திருந்தது.
இதனை நிறைவேற்றக்கோரி ஆசிரியர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், போராட்டங்களை மேற்கொண்டும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆசிரியர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் எழும்பூர் இராஜரத்தினம் மைதானம் அருகே 500-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பங்கேற்ற ஆசிரியர்கள், பணி நிரந்தரம் வழங்கப்படாததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.