சீதாராம் யெச்சூரி மறைவு- தலைவர்கள் இரங்கல்!
Nov 9, 2025, 09:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீதாராம் யெச்சூரி மறைவு- தலைவர்கள் இரங்கல்!

Web Desk by Web Desk
Sep 12, 2024, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட சீதாராம் யெச்சூரி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்டுள்ள செய்திக் குறி்ப்பில், மாணவர் தலைவராக இருந்து தேசிய அரசியலில் நுழைந்து நாடாளுமன்ற உறுப்பினராக தனக்கென தனி முத்திரையை பதித்தவர் சீதாராம் யெச்சூரி என புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் குறிப்பில், இடதுசாரி கட்சியினருக்கு ஒளிக்கீற்றாக திகழ்ந்த சீதாராம் யெச்சூரி, அனைத்து கட்சியினருடன் நட்பு பாராட்டியதற்காக எப்போதும் நினைவுகூரப்படுவார் என்று கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், யெச்சூரியின் இறப்பு அரசியல் களத்தில் பேரிழப்பை ஏற்படுத்திவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட இரங்கல் செய்தியில், பொது வாழ்வில் யெச்சூரி ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும் என தெரிவித்துள்ளார்.

யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லி ஜெஎன்யு-வில் தாம் படித்தபோது தனக்கு யெச்சூரி சீனியர் எந்றும், அவரது இழப்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாதது என்றும் கூறினார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில், சீதாராம் யெச்சூரி நாட்டைப் பற்றிய ஆழமான புரிதல் கொண்டிருந்ததாகவும், அவர் உடனான நீண்ட உரையாடலை இழப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாணவப் பருவத்திலேயே அவசர நிலையை எதிர்த்து நின்றதால், நீதியை நிலைநாட்டுவதில் யெச்சூரியின் அர்ப்பணிப்பு உணர்வு வெளிப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், சீதாராம் யெச்சூரியின் இறப்பு தேசிய அரசியலில் மிகப்பெரிய இழப்பு என கூறியுள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாடு வெளியிட்ட அறிக்கையில், அடிமட்டத் தொண்டர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தமைக்காக சீதாராம் யெச்சூரி எப்போதும் நினைவுகூரப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் டி.ராஜா, சீதாராம் யெச்சூரியின் இறப்பு ஒட்டுமொத்த இடதுசாரி கட்சியினருக்கும் பேரிழப்பு என வேதனை தெரிவித்தார்.

Tags: Death of Sitaram Yechury- Leaders condole!
ShareTweetSendShare
Previous Post

புதிய உச்சத்துடன் நிறைவடைந்த பங்குச்சந்தைகள்!

Next Post

சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

Related News

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் இரவு தங்க எந்த தடையும் விதிக்கவில்லை – காவல்துறை விளக்கம்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் என்ன செய்கிறார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 இறுதிப்போட்டி மழையால் ரத்து – தொடரை கைப்பற்றியது இந்தியா!

பாகிஸ்தானின் கஹுதா அணுசக்தி தளம் மீது குண்டு வீச இந்திரா காந்தி அனுமதி அளிக்கவில்லை – ரிச்சர்ட் பார்லோ

சமூகத்தை ஒன்றிணைக்கவே ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவானது – மோகன் பகவத்

சாதி, மதம் மூலம் மக்களிடையே காங்கிரஸ் பிளவை ஏற்படுத்துகிறது – ராஜ்நாத்சிங்

Load More

அண்மைச் செய்திகள்

சாதி, பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் அனைவரையும் நீதி சென்றடைய வேண்டும் – பிரதமர் மோடி

திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி – இபிஎஸ் விமர்சனம்!

தமிழ் இலக்கியத்திற்கு சமண மதம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது – சிபி.ராதாகிருஷ்ணன்

நவம்பர் 11-ம் தேதி பூடான் செல்கிறார் பிரதமர் மோடி – அந்நாட்டு மன்னர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார்!

அரசுமுறை பயணமாக அங்கோலா சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியாவின் ஜெட் வேக பொருளாதார வளர்ச்சி : சொகுசு வீடுகளுக்கு டிமாண்ட் கொழிக்கும் ரியல் எஸ்டேட்!

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

ஆஸி.க்கு எதிரான 5வது டி20 ரத்து – தொடரை வென்று இந்தியா அசத்தல்!

விமானச் சேவையை முடக்கிய GPS SPOOFING – டெல்லியில் இதுதான் முதல்முறை!

5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் – என்ன நடக்கிறது மாலியில்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies