வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தைகள் புதிய உச்சத்துடன் நிறைவடைந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் நான்காவது நாளில் புதிய உச்சத்துடன் நிறைவடைந்தன.
அதன்படி மும்பை பங்குச்சந்தை எண் சென்செக்ஸ் ஆயிரத்து 439 புள்ளிகள் உயர்ந்து, 82 ஆயிரத்து 962 புள்ளிகளாக புதிய உச்சத்தில் நிலைப்பெற்றது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 470 புள்ளிகள் உயர்ந்து, 25 ஆயிரத்து 388 புள்ளிகளாக உச்சத்தில் நிறைவடைந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.