வேலூர் மத்திய சிறைக்கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதியான சிவக்குமாரை சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி தாக்கியதாக புகார் எழுந்தது.
மேலும், தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று வீட்டு வேலைகளை செய்யக்கூறி கொடுமைப் படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, வேலூர் சிறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் டிஐஜி ராஜலட்சுமியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டிஜிபி மகேஷ்வர தயாள் உத்தரவிட்டுள்ளார். மேலும், சென்னை சரக சிறைத்துறை டிஐஜி முருகேசனுக்கு வேலூர் டிஐஜியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.