பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் சாதனை படைத்த வீரர்களை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் பங்கேற்று பல்வேறு விருதுகளை வென்றனர். அந்த வகையில் சோனால் படேல், மோனா அகர்வால் உள்ளிட்ட சாதனையாளர்களை பிரதமர் மோடி நேரில் வரவழைத்து அவர்களுக்கு பரிசு வழங்கி கெளரவித்தார்.