ஓணம் பண்டிகை - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!
Oct 9, 2025, 12:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓணம் பண்டிகை – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

Web Desk by Web Desk
Sep 14, 2024, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “மக்களுக்காகவே வாழ்ந்த மன்னன் மகாபலியின் நினைவாக திருவோணம் திருநாளை கொண்டாடும், உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மன்னன் மகாபலியின் வாழ்க்கை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு ஆகும். இன்றுள்ள கேரளத்தை முன்னொரு காலத்தில் மிகச்சிறப்பாக ஆட்சி செய்து வந்த மகாபலி, கொடை வள்ளலாகவும் விளங்கினார். மகாபாரத்தில் கர்ணனின் வள்ளல் குணத்தைப் பயன்படுத்தி அவரது உயிர் எப்படி நயவஞ்சகமாக பறிக்கப்பட்டதோ, அதேபோல் தான் மகாபலியியின் உயிரும் பறிக்கப்பட்டது. வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்ணு மூன்றடி மண் கேட்க, மகாபலியும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

ஆனால், முதல் அடியில் மண்ணையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்த விஷ்ணு, மூன்றாம் அடியை மகாபலி காலில் வைத்து பாதாள உலகத்திற்குள் தள்ளினார். பாதாள உலகத்தில் தள்ளப்பட்ட மகாபலி ஆண்டுக்கு ஒருமுறை மக்களைக் காண வரும் நாளே திருவோணம் திருநாளாக உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களால் மிக உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஓணம் திருநாள் அறுவடைத் திருநாள். ஓணம் திருநாள் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை நிறைக்கும் திருநாள். தமிழர்களின் கலாச்சாரமே எல்லோரும், எல்லாமும் பெற்று வாழ வேண்டும் என்பது தான். ஓணம் திருநாள் வலியுறுத்துவதும் அதை தான். அந்த வகையில் தமிழ் பண்பாட்டிற்கும், ஓணத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தமிழ் இலக்கியத்திலும் இது தொடர்பான குறிப்புகள் காணப்படுகின்றன.

கடவுளின் பூமி என்றும், இயற்கையின் சொர்க்கம் என்றும் போற்றப்படும் கேரளம் வளம் கொழிக்க வேண்டும்; கேரள மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது தான் எனது விருப்பம். ஓணம் திருநாள் மக்களுக்கு சொல்லும் செய்தியும் அதுதான்.

அந்த செய்தியை மதித்து, ஓணம் திருநாளைப் போலவே எல்லா நாட்களிலும் மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும் வேண்டும் என்று வேண்டி திருவோணம் கொண்டாடும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags: onam festivalanbumani ramadossAnbumani Ramadoss greetings
ShareTweetSendShare
Previous Post

நேரம் ஒதுக்குவதில் தகராறு – பல் மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர்!

Next Post

சித்தூர் அருகே கார் டயர் வெடித்து விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி!

Related News

ஆஸ்திரேலியா சென்றுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த கிரெட்டா தன்பெர்க்!

ஆஸ்திரேலியாவில் UFC வீரர் சுமன் மொக்தாரியன் சுட்டுக்கொலை!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ZOHO மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஸ்ரீதர் வேம்பு நன்றி!

நோபல் பரிசு கிடைக்குமா ? – ட்ரம்ப் அளித்த பதில் தெரியுமா?

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies