ஜார்கண்டில் 6 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
ஜார்கண்ட் மாநிலத்திற்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு 6 வந்தே பாரத் ரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். இந்த வந்தே பாரத் ரயில்கள் பெர்ஹாம்பூர்-டாடா, ரூர்கேலா-ஹவுரா, தியோகர்-பனாரஸ், ஹவுரா-கயா மற்றும் ஹவுரா-பாகல்பூர் இடையே இயக்கப்படுகிறது.
மேலும் 21 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இதனை தொடர்ந்து ஜாம்ஷெட்பூரில் உள்ள கோபால் மைதானத்தில் பாஜக ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளார். இந்நிலையில் பிரதமர் வருகையையொட்டி, பாதுகாப்பிற்காக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.