உத்தர பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மீரட் நகரில் ஜாகீர் காலனியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 15 பேர் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்ட 13 பேர் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.