ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் ‘ஸ்வச்தா ஹி சேவா 2024’ திட்டத்தின் கீழ் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ராம்நகர் ரயில் நிலையத்தில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
ரயில் தண்டவாளத்தில் கிடக்கும் குப்பைகளை பிஎஸ்எஃப் வீரர்கள் ஆர்வமுடன் அகற்றினர். இந்தியா முழுவதும் தூய்மை முயற்சிகளில் கூட்டு நடவடிக்கை மற்றும் குடிமக்கள் பங்கேற்பின் உணர்வை மீண்டும் உருவாக்க ‘ஸ்வச்தா ஹி சேவா 2024’ தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.