கரூர் அருகே கோயில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல் வைக்க சென்ற அதிகாரிகளை கண்டித்து, வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாநகர் அருகே வெண்ணைமலை பாலசுப்ரமணிய கோயிலை சுற்றி, ஆக்கிரமிப்பில் உள்ள பல ஏக்கர் நிலங்களை மீட்கும் பணியில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, போலீஸ் பாதுகாப்புடன் 2 நிறுவனங்கள் மற்றும் 8 கடைகளுக்கு சீல் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகள் நடத்திய சமாதானப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனிடையே, அதிகாரிகள் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் பலர் கடைகள் முன்பு குவிந்து கோஷமிட்டனர். இதில், ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, மூதாட்டி ஒருவர் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.