குமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் போலீசாரை கண்டித்து, அப்பகுதி பெண்கள் கைகளில் அகல் விளக்கு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாழக்குடி அருகே கடந்த 15 -ம் தேதி நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரில் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 40 பேர் மீது எஸ்.சி. மற்றும் எஸ்.டி. சட்டப்பிரிவில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, முப்பிடாரி அம்மன் கோயில் முன்பு திரண்ட கிராம மக்கள், தங்கள் கைகளில் அகல் விளக்கு ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதுதொடர்பாக உள்துறைச் செயலாளரை சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.