பெரம்பலூர் அருகே அரசு பேருந்து ஓட்டுநரை, மற்றொரு பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகள் சேர்ந்து சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது. அப்போது, திருச்சியில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற மற்றொரு அரசுப் பேருந்து, நின்றிருந்த அரசுப் பேருந்து மீது உரசுவதுபோல் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகள், திருமாந்துறை சுங்கச்சாவடியில் வேலூர் நோக்கிச் சென்ற பேருந்தை வழிமறித்து, ஓட்டுநரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.