சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மானாமதுரை அருகே தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பெண்ணை அங்குவந்த 5 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வில்வக்குமார், முத்துக்குமார், ராமசாமி, அஜய்குமார், தவமுனியசாமி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
முன்னதாக காவல்துறையினர் பிடிக்க சென்றபோது தப்பிச்செல்ல முயன்ற வில்வக்குமார், முத்துக்குமார் ஆகிய இருவரும் தவறி கீழே விழுந்ததில் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.