புதுச்சேரி அரசுப்பள்ளியில் VIRTUAL REALITY தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பித்தனர்.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவர்களின் புத்தக சுமையை போக்கும் வகையிலும், மன அழுத்தம் ஏற்படாமல் இருக்கும் வகையிலும், மாதத்தின் கடைசி நாளில் புத்தக பை இல்லா தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் பள்ளிக்கு வருகை தரும் மாணவர்கள் கைவினை பொருட்கள் செய்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்களில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள எக்கோல் ANGLAISE அரசுப்பள்ளியில் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு VIRTUAL REALITY தொழில்நுட்பம் மூலம் பாடம் நடத்தப்பட்டது. இதன்மூலம், செல்லப் பிராணிகள் மற்றும் காட்டு விலங்குகளை தங்கள் அருகில் இருப்பதை போல் உணர்ந்து மாணவர்கள் கல்வி கற்றனர்.