ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை அம்மன் கோயிலில் நடிகர் கார்த்தி சுவாமி தரிசனம் செய்தார்.
கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன் திரையரங்களில் வெளியானது.
இதை தொடர்ந்து விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை அம்மன் கோயிலில் அவர் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.