சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 48 ரூபாய் அதிகரித்து ஆயிரத்து 903 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், இந்த மாதத்துக்கான வணிக சிலிண்டர் விலை குறித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 48 ரூபாய் அதிகரித்து, ஆயிரத்து 903 ரூபாய்க்கும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை 818 ரூபாய் 50 காசுகளுக்கு மாற்றமின்றி விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.