திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது.
அக்டோபர் 4-ஆம் தேதி வருடாந்திர பிரமோற்சவ விழா தொடங்கி நடைபெற இருப்பதால் முழுவதும் சுத்தம் செய்யும் பணியில் தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு தயார் செய்யப்பட்ட நறுமண கலவை கோயில் சுவர்களில் தெளிக்கப்பட்டது.