சென்னை கேசவப்பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதிக்கு திருக்குடை ஊர்வலம் வெகுவிமர்சையாக தொடங்கியது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தின்போது, ஏழுமலையான் கருட சேவைக்கு தமிழக பக்தர்கள் சார்பில் வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுவது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக பக்தர்கள் சார்பில் வெண்பட்டு திருக்குடைகள், சென்னை பூக்கடை பகுதியில் உள்ள சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காணிக்கையாக வழங்கப்படும்.
இந்த ஆண்டு 11 வெண்குடைகள் காணிக்கையாக வழங்கப்படுகிறது. அதன்படி, கேசவப் பெருமாள் கோயிலில் வெண்பட்டு குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஹிந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி தொடங்கி வைத்தார்.