நடிகர் விஜய் கட்சியின் முதல் மாநாட்டிற்கான பந்தகால் நடும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெறும் என கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் 85 ஏக்கர் இடத்தில் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக தவெக நிர்வாகிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து மாநாட்டிற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், முதல் மாநாட்டிற்கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாநாட்டிற்கான பந்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் இருந்து தவெக நிர்வாகிகள் கொண்டு வந்த புனித நீர் பந்தகால் நடும் இடத்தில் ஊற்றப்பட்டது. பந்தகால் நடும் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.