சென்னை தாம்பரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் சென்னை தாம்பரத்தில் கனமழையால் சாலை முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, தாம்பரத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு படகுகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அனைத்து பகுதிகளிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு உணவுப்பொருட்கள் தயாராக இருப்பதாகவும் கூறினார்.