திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரால் சூழப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
புழல், சோழவரம், செங்குன்றம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பழவேற்காட்டில் இருந்து பொன்னேரி செல்லும் ரயில்வே சுரங்கப்பாதை மழை நீரில் சூழப்பட்டுள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், நீரை வெளியேற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.