திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
ஊத்துக்குளி ஆர்.எஸ். பகுதியை சேர்ந்த ராதா, அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளைஞருடன் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது இவர்களது இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்துகொண்டிருந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி ராதா உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த இளைஞர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.