நெல்லையில், தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவிகளின் விடுதிகளை சமூக நலத்துறை அலுவலர் மற்றும் பாளையங்கோட்டை தாசில்தார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை பயிற்சி நிர்வாகி பிரம்பால் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில், சமூக நலத்துறை அலுவலர் தன்ஷிகா பேகம் மற்றும் பாளையங்கோட்டை தாசில்தார் இசைவாணி ஆகியோர் நீட் பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவிகளின் விடுதிகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது மாணவிகள் தங்கும் விடுதி அரசின் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக நீட் பயிற்சி மைய நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு சமூக நலத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.