கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே வளர்ப்பு நாய்க்கு உறவினர்கள் வளைகாப்பு நடத்தினர்.
தம்பிபேட்டை பாளையம் பகுதியை சேர்ந்த சிவா என்பவர் தனது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். அந்த நாய் கர்ப்பமடைந்ததை அறிந்த குடும்பத்தினர், வளைகாப்பு நடத்த முடிவுசெய்தனர்.
அதனைத்தொடர்ந்து சீர்வரிசையுடன் வந்த உறவினர்கள், வளர்ப்பு நாய்க்கு வளையல் அணிவித்து வளைகாப்பு நடத்தினர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.