2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனியார் எஃப்.எம். தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சி நிறைவுபெற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 10 கோடி உறுப்பினர்களைக் கொண்ட பாஜக பிற கட்சிகளைபோல் குடும்ப கட்சி கிடையாது என்றும், பாஜகவில் சாதாரண தொண்டர்கூட உயர் பதவிக்கு வரலாம் எனவும் கூறினார்.
பால் விலை, சொத்துவரி என அனைத்தையும் உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனக்கூறிய அவர், வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் எனத் தெரிவித்தார்.