பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16ஆவது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்தார்.
இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு தலைவர்களும் எல்லைப் பகுதியில் அமைதியை மீட்டெடுப்பது குறித்தும், இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்தும் விவாதித்ததாக வெளியறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்ததாக விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.