தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்று சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதி பிற்பகல் 2.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான நிலையில்,அடுத்த 2 நாட்களில் தமிழக கடற்கரை நோக்கி அது நகரக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யுமென தெரிவித்துள்ளது.