சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவில் கனமழை வெளுத்து வாங்கியதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, வருகிற 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதற்கிடையே, சென்னையின் புறநகர் பகுதிகளான OMR சாலை, ECR சாலை, திருவான்மியூர், வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதேநேரத்தில் கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
















