கரூரில் நடைபெற்ற வாக்கத்தான் போட்டியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு நடந்து சென்றதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கரூரில் வர்த்தக இலக்கு 50 ஆயிரம் கோடியை அடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி நடைபெற்றது. திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்றார்.
இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்கள் அவதியடைந்தனர். மேலும், சில பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.