சேலத்தில் நள்ளிரவு நேரங்களில் உலா வரும் மங்கி குல்லா கொள்ளையர்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
அஸ்தம்பட்டியில் உள்ள வழக்கறிஞர் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரி வீடுகளின் சுவர்களில் மங்கி குல்லா கொள்ளையர்கள் குதித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மங்கி குல்லா கொள்ளையர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.