கானா பாடகி இசைவாணி மற்றும் மமக நிர்வாகி யாக்கூப் ஆகிய இருவரையும் கைது செய்யக்கோரி பா.ஜ.கவினர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
சிவகங்கையில் சுவாமி ஐயப்பன் குறித்து தவறாக சித்தரித்து பாடல் பாடிய இசைவாணி, பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா-விற்கு கொலை மிரட்டல் விடுத்த யாகூப்பை கைது செய்ய கோரியும், சிவகங்கை நகர் பா.ஜ.க சார்பில் நகர தலைவர் உதயா தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.