திருச்சியில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞருக்கு நிவாரணம் கேட்டு திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த விசிக நிர்வாகி தினேஷ், திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை கடந்துள்ளார். சாலையின் நடுவே அமைக்கப்பட்ட மின் விளக்கின் கம்பத்தை தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த இளைஞருக்கு நிவாரணம் கேட்டு திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மற்றும் விசிகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.