சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வரக்கூடிய நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்த சூழலில், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்தது. மேலும், வேளச்சேரி, பள்ளிக்கரணை, ராயபுரம், ராயப்பேட்டை, வடபழனி, கோயம்பேடு, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.