தஞ்சை மாவட்டம் வல்லம் காவல் துணை கண்காணிப்பாளர், கடையின் உரிமையாளர்கள் கெஞ்சியும் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்ரமிப்புகளை இடிக்க சொல்லி கைகட்டி வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஓரத்தில் போடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகள், காவல் துறை பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தகர்க்கப்பட்டது.
அப்போது, அரைமணி நேரம் கொடுத்தால் கடையை தாங்களே அகற்றி விடுவதாகவும், பொருட்கள் எல்லாம் சேதமடைவதால் இடிப்பதை நிறுத்துமாறும் வல்லம் காவல் துணை கண்காணிப்பாளரிடம் கடையின் உரிமையாளர்கள் கதறினர்.
ஆனால், மிரட்டும் தொனியில் அவர் பேசியதுடன், கடைகளை இடிக்க சொல்லி கைக்கட்டி வேடிக்கை பார்த்ததால் பொதுமக்கள் அதிருப்திக்குள்ளாகினர்.