நீலகிரி மாவட்டம் மசினகுடியில் விபத்தில் காயமடைந்த இளைஞர்களுக்கு டார்ச் வெளிச்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மசினகுடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இரு இளைஞர்கள் விபத்தில் சிக்கினர். இதனையடுத்து காயமடைந்த அவர்கள் அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு மின் தடை ஏற்பட்டதால், பணியில் இருந்த மருத்துவர்கள் டார்ச் லைட் மற்றும் செல்போன் வெளிச்சத்தின் மூலம் இளைஞர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையாக முன் வினியோகம் செய்துதர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.