நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த விக்கிரமசிங்கபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 20-ஆவது வார்டு ராமலிங்கம் பகுதியில், திடக்கழிவு மேலாண்மை குப்பைக் கிடங்கு மற்றும் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். குப்பை கிடங்கை விரைவில் அகற்றவில்லை எனில், போராட்டம் நடத்த போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.