மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது குதிரைகள் மோதியதில், அரசு பேருந்து முன்பு நிலை தடுமாறி கீழே விழுந்த பெண், நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு பேருந்தை உடனடியாக நிறுத்தியதால் அப்பெண்மணி உயிர் தப்பினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
தரங்கம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் குதிரைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இது தொடர்பாக, புகார் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.