கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அதிமுக கவுன்சிலர்கள் 8 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27 -ம் தேதி நடைபெற்ற நகர் மன்ற கூட்டத்தில், நகராட்சி தலைவர் மீது சில்வர் டம்ளர் வீசி, மிரட்டல் விடுத்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக கவுன்சிலர்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக கவுன்சிலர்கள், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஆஜராகி ஒரு வாரத்திற்கு கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.