கூடைப்பந்து வரலாற்றில் 27 ஆண்டுகளுக்கு பிறகு கஜகஸ்தானை 88-க்கு 69 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி, இந்தியா சாதனை படைத்தது.
தமிழக வீரர் பிரணவ் 32 புள்ளிகளை எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். சென்னையில் முதல் முறையாக சர்வதேச அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில், உலக தரவரிசையில் 76-ஆவது இடத்தில் உள்ள இந்திய அணி, 69-ஆவது இடத்தில் உள்ள கஜகஸ்தானை வென்றது. இந்திய வீரர்கள் கன்வர், கேப்டனும் தமிழக வீரருமான ஹஃபீஸ் மற்றும் அமிஜோத் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இந்திய அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளன.