காஞ்சிபுரத்தில் குற்றவாளிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட 27 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.
மாவட்டம் முழுவதும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டவர்களை கைது செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், அவர்கள் பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
அவ்வாறு பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வாகனங்களை மக்கள் வாங்கிச் சென்றனர்.