நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தம்பதிக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இருவருக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 18 ஆண்டுகள் கடந்த நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இருவரும் பிரிந்து வாழ 2022ஆம் ஆண்டு முடிவு செய்தனர்.
இதை தொடர்ந்து நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சுபாதேவி முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், தனுஷ் – ஐஸ்வர்யாவின் திருமண பதிவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.