தமிழ் மொழி மற்றும் திருக்குறளை உலகளவில் பிரபலப்படுத்தும் பிரதமர் மோடியின் முயற்சிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஃபிஜி நாட்டில் தமிழ் மொழி திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முயற்சி ஃபிஜி நாட்டில் குடியேறிய தமிழர்களுக்கு தங்கள் பாரம்பரியத்தை பாதுகாக்க உதவும் என தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி,
தமிழ் மொழி மற்றும் திருக்குறளை உலகளவில் பிரபலப்படுத்தும் பிரதமர் மோடியின் முயற்சிக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசின் இந்த முயற்சி அழகான மற்றும் சக்தி வாய்ந்த தமிழ் மொழியை கற்றுக்கொள்ள மற்றவர்களை ஊக்குவிக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.