ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார்.
ஜார்க்கண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் நான்கு இடங்களிலும் வென்றது.
இதையடுத்து, ஆளுநர் சந்தோஷ் காங்வாரை சந்தித்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
ஆளுநரின் ஒப்புதலை அடுத்து, ஜார்க்கண்டில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் சோரன், இன்று முதலமைச்சராக பதவியேற்கிறார்.
மாலை 4 மணிக்கு மொரபாதி மைதானத்தில் நடக்கும் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.