பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் காவல் நிலையத்தை 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டனர்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் கலாசார மையம் சார்பில் இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் சுவாமி ஐயப்பனை பற்றி கானா பாடகி இசைவாணி பாடிய பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்துக்குள் மனதை புண்படுத்தும் விதமாக பாடல் பாடியதாக அவருக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர். அப்போது மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.