சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெளியே மழைநீர் அருவிபோல் கொட்டுகிறது.
ஃபெஞ்சல் புயலால் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் இரவு முதல் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசுகிறது.
விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மழைநீர் அருவி போல் கொட்டும் நிலையில், அவ்வழியாக பயணிப்பவர்கள் அதை அச்சத்துடன் பார்த்து செல்கின்றனர். ஃபெஞ்சல் புயல் கரையை நெருங்குவதால் கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் தேவையின்றி வெளியேற வேண்டாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.