ஃபெஞ்சல் புயல் மழையினால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
காலை 6 மணி நிலவரப்படி புழல் ஏரிக்கு வினாடிக்கு 3470 கன அடி நீர் வருகிறது.
சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 140 கன அடி நீர் வரத்து உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிக அளவா 4217கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
பூண்டி அணைக்கு வினாடிக்கு 1240 கன அடி வினாடிக்கு வருகிறது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை* அணைக்கு 188 கன அடி வினாடிக்கு வருகிறது.
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை நின்றுள்ளதால் நீர்வரத்து படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 381 ஏரிகளில் 10 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன/
செங்கல்பட்டில் 103 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளதாகவும் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.