புதுச்சேரியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு அதி கனமழை பெயதுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கரையை கடந்துள்ளது. இந்த புயலின் காரணமாக கடலோர மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசியது. புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.,
புதுச்சேரியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு அதி கனமழை பெயதுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48.4 cm மழை பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 1995இல் இதே போல மழை பெய்துள்ளது.
இன்று காலை 0830 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரே நிலவரப்படி பெய்த மழை அளவு (செ.மீ.)
புதுச்சேரி-48.4
கடலூர்-23
சென்னை-விமான நிலையம்-14
ஏற்காடு-14
வேலூர்-11
திருத்தணி-11
நுங்கம்பாக்கம்-10
திருப்பத்தூர்-8
பரங்கிப்பேட்டை- 7
தர்மபுரி-5
சேலம்-5
ராயலசீமா: திருப்பதி-8
ஆரோக்கியவரம்-4
தெற்கு கடலோர ஆந்திர பிரதேசம்:
நெல்லூர்-8
காவாலி-2